Header Ads

Breaking News
recent

+2வில் அதிக மதிப்பெண் பெற்ற எஸ்சி, எஸ்டி மாணவர்கள் முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகை

தமிழக அரசு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை ஒரு பாடமாக பயின்று, அதிக மதிப்பெண் பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களில் முதல் 1000 பேருக்கும், மாணவிகளில் முதல் 1000 பேருக்கும் முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகையாக ரூ.3000/- வழங்கி வருகிறது.

பன்னிரெண்டாம் வகுப்பை தொடர்ந்து அல்லது ஒர் ஆண்டு இடைவெளிக்கு பிறகு மேல்படிப்பு பயிலும் மாணவ/மாணவியருக்கு 2012-13 ஆம் கல்வியாண்டு முதல் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3000/- வீதம் 5 ஆண்டுகளுக்கு இப்பரிசுத் தொகை வழங்கப்படும். இப்பரிசுத் தொகை பெற நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் (Cut off Mark)  2011-12 ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு 1069, மாணவியருக்கு 1082, 2012-13 ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு 1074, மாணவியருக்கு 1085, 2013-14 ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு 1087, மாணவியருக்கு 1101 மதிப்பெண்கள் ஆகும்.

ஆகவே 2014 ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் அதனை விட அதிக மதிப்பெண்கள் பெற்ற, சென்னை மாவட்ட கல்லூரிகளில் பயிலும் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ/மாணவியர் தங்களது பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகல், சாதி சான்றிதழின் நகல் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கும், தங்களது உயர்கல்வியை பிற மாவட்டங்களில் தொடரும் மாணவ/மாணவியர் சம்மந்தப்பட்ட கல்வி நிலைய முதல்வர் மூலமாக அக்கல்வி நிலையம் அமைந்துள்ள மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கும் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.