Header Ads

Breaking News
recent

நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நேரில் ஆய்வு நடத்த பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு உத்தரவு


இந்தியா முழுவதும் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிகர்நிலை பல்கலைகழகங்களில் , பல்கலைக்கழக மானியக் குழு நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களில் பல்கலைக்கழக மானியக் குழு நடத்திய ஆய்வின் அறிக்கை மீதான வாதம் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆய்வு நடத்தப்பட்டதாக யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி, வரும் செவ்வாய்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

தனியார் பல்கலைகழகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் தரமாக இல்லை என கூறி சில ஆண்டுகளுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து மத்திய அரசு டாண்டன் தலைமையிலான குழுவை அமைத்து நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்தது. அதில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 40-க்கும் மேற்பட்ட நிகர்நிலை பல்கலைகழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

No comments:

Powered by Blogger.