Header Ads

Breaking News
recent

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 26-வது பட்டமளிப்பு விழா

தமிழநாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 26-வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது.

ஆளுநர் ரோசய்யா, தமிழகம் மற்றும் கேரளத்திற்கான யுனிசெஃப் தலைமை அதிகாரி சதீஷ் குமார் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், மருத்துவப் பணியும் மருத்துவக் கல்வியும் வணிக மயமாகி வரும் சூழலை மாற்ற அரசு முயற்சிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். இந்த பட்‌மளிப்பு விழாவில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் பட்டம் முடித்த 14,260 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு 175 பதக்கங்களும் வழங்கப்பட்டன. அதிகபட்சமாக 10 பதக்கங்களை வித்யா என்ற மருத்துவ மாணவி பெற்றார்.

No comments:

Powered by Blogger.