Header Ads

Breaking News
recent

கேந்திரிய வித்யாலயா சங்கேதன் (KVS) பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப முடிவு

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் (KVS) பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 08

பதவி கோடு: 64

பணி: Technical Officer

காலியிடங்கள்: 03

வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600

தகுதி: சிவில், ஆர்க்கிடெக்சர், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பதவி கோடு: 65

பணி: Assistant

காலியிடங்கள்: 81

வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் UDC ஆக 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.



பதவி கோடு: 66

பணி: Upper Division Clerk

காலியிடங்கள்: 120

வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

தகுதி: பட்டப்படிப்புடன் மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் LDC ஆக 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.


பதவி கோடு: 67

பணி: Lower Division Clerk

காலியிடங்கள்: 284

வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் குறித்து தெரி்ந்திருத்தல் வேண்டும்.



பதவி கோடு: 69

பணி: Stenongrapher Grade-II

காலியிடங்கள்: 29

வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.2,400

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்தி அல்லது ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதவும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் ஆப்ளிமேஷன் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு சலுகை: ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வுக் கட்டணம்: Technical officer பணிக்கு ரூ.1,200, இதர பணிகளுக்கு ரூ.750. இதனை இந்தியன் வங்கியில் Credit/Debit Card மூலம் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் ஸ்கில் டெஸ்ட் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தென்னகத்தில் எழுத்து தேர்வுகள் நடைபெறும் இடம் மற்றும் மையக் கோடுகள்: பெங்களூர்-13, சென்னை -17, ஹைதராபாத் -21, திருவனந்தபுரம் -26

விண்ணப்பிக்கும் முறை: www.kvsangathan.nic.in அல்லது http://jobapply.in/kvs என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். Assistant மற்றும் UDC பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் பிரிண்ட் அவுட்டுடன் கல்வித்தகுதி, வயது, சாதி சான்றிதழ்களின் நகல்களில் சுயமாக அட்டெஸ்ட் பெற்று கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Post Box No. 3076, Lodhi Road, New Delhi-110003.

Technical Officer, LDC, Stenographer Grade-II பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவிதமான நகல்களை அனுப்ப தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2014

பிரிண்ட் மற்றும் சான்றிதழ் நகல்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 22.09.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.kvsangathan.nic.in அல்லது http://jobapply.in/kvs என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Powered by Blogger.